Friday, July 24, 2009

கிழங்கு மசால் (Pototo Masal)

தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு - 250 கிராம் (4 பேர்)
பச்சை மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
எண்ணெய் - 2 மேசை கரண்டி
கடலை மாவு - 1 டீ ஸ்பூன்
உப்பு - 2 டீ ஸ்பூன்
தாளிக்க
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


செய்முறை
உருளை கிழங்கு குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின் தோல் நீக்கி நொறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடாவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாய் போடவும். வெங்காயத்தில் பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கியவுடன், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து லேசாக கிளறி விடவும். பின் கடலைமாவை நீரில் கரைத்து கடாயில் ஊற்றவும். 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்ககவும்.

எலுமிச்சை சாதம் (Lemon Rice)

தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் - 2 பெரியது (4 பேர்)
பச்சை மிளகாய் - 6
மிளகாய் வற்றல் - 6
எண்ணெய் - 2 மேசை கரண்டி
உப்பு - 2 டீ ஸ்பூன்
தாளிக்க
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உ.பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வற்றல் போடவும். பின் கடலை பருப்பை போட்டு சிறிது வறுத்தவுடன் கீழே இறக்கவும். ஆறியவுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.

Thursday, July 23, 2009

சப்பாத்தி (Chapathy)

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 500 கிராம்
எண்ணெய் - 1 மேசை கரண்டி
உப்பு - 1 டீ ஸ்பூன்


செய்முறை
பாத்திரத்தில் கோதுமை மாவுடன் உப்பு + தண்ணீர் ஊற்றி பிட்டு மாவு போல் பிசையவும். பின் எண்ணெய் ஊற்றி உருண்டையாக பிசைந்து பின் புரோட்டா மாவு போல் பிசையவும்.

தக்காளி சட்னி (tomoto chutney)

தேவையான பொருட்கள்
தக்காளி - 400 கிராம்
சின்ன வெங்காயம் - 1 பிடி (4 பேர்)
பச்சை மிளகாய் - 6
எண்ணெய் - 4 மேசை கரண்டி
குழம்பு பொடி - 1 கரண்டி (4 பேர்)
உப்பு - தேவையான அளவு


செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளியை போடவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் குழம்பு பொடியை சிறிதளவு நீரில் கரைத்து ஊற்றவும். 2 நிமிடம் ஆனவுடன் இறக்கி சூடு ஆறியவுடன் லேசாக அரைக்கவும்.

சாம்பார் (காலை)

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 (2 பேர்)
மிளகாய் பெரியது - 1 (1 நபர்)
தக்காளி சிறியது - 1 (1நபர்)
துவரம் பருப்பு + பாசி பருப்பு - 50 மிலி (3:1)
மற்றவை மதிய சாம்பார் போல்

மதிய சாம்பார் (sambar)

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 பிடி (4 பேர்)
துவரம் பருப்பு - 50 மிலி (2 பேர்)
மிளகாய் பெரியது - 1 (1 நபர்)
குழம்பு பொடி - 1 கரண்டி (4 பேர்)
தக்காளி சிறியது - 1 (1நபர்)
கடலை மாவு - 1/4 கரண்டி (4 பேர்)
காய்கறிகள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 (4 பேர்)
பெருங்காயம் - 1 சிறு கரண்டி (4 பேர்)
விளக்கெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை
குக்கரில் தண்ணீர் ஊற்றி, துவரம் பருப்பு, விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகள் போட்டு 3 விசில் வரும் வரைவைத்து பின் இதமான சூட்டில் 5 நிமிடம் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரஷர் நீங்கிய பின் குழம்பு பொடி, கடலை மாவை நன்கு நீரில் கரைத்துஊற்றவும். தேவையான அளவு உப்பை சேர்த்து குக்கரினை மூடாமல் 5 நிமிடம்கொதிக்க வைக்கவும். சுவையான சாம்பார் தயார்.

தேங்காய் சட்னி (Coconut Chutney)

தேவையான பொருட்கள்
தேங்காய் - 1/2 மூடி (4 பேர்)
பொட்டுகடலை - 50 கிராம்
மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
கடுகு, உ.பருப்பு, எண்ணெய்

செய்முறை
பொட்டுகடலை அரைத்து பொடியாக்கி தேங்காய், மிளகாய் போடவும். தண்ணீர் ஊற்றி சற்று நேரம் அரைத்து தாளிக்கவும்.

பொங்கல் (Pongal)

தேவையான பொருட்கள்
இஞ்சி - 2 அங்குலம் (3-4 பேர்)
அரிசி - 1 கப் (1 நபர்)
பாசி பருப்பு - 1/4 கப்
எண்ணெய் - 2 மேசை கரண்டி (3-4 பேர்)
தண்ணீர் - 2 1/2 கப் (1 நபர்)
மிளகு - தேவையான அளவு
சீரகம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி, மிளகு, இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் சீரகம், கறிவேப்பிலை போடவும். பிறகு தண்ணீர் ஊற்றி, உப்பு சிறிதளவு, அரிசி, பாசி பருப்பு போட்டு 2 விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.

சாப்பாடு (Meals)

தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப் (1 நபர்)
தண்ணீர் - 2 1/2 கப்


செய்முறை
2 விசில் வரும் வரை குக்கரில் வைத்து இதமான சூட்டில் 10 நிமிடம் வைக்கவும். பிரஷர் இறங்கியவுடன் சாப்பாடு தயார்.